சிவனொளிபாத மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபாத புனித தலத்தின் அதிபதி பெங்கமுவ ஸ்ரீ தம்மதின்ன தேரர் இதனை அறிவித்துள்ளார்.
ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டுள்ள அவர் ஒவ்வொரு ஆண்டும் அதிக மழை பெய்யும் காலங்களில் சிவனொளிபாத மலைக்குக் கீழே உள்ள மலையில் வளர்ந்துள்ள தாவர வகைகள் கீழே விழுவது வழக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு இயற்கையான நிகழ்வு என்றும், இந்த சம்பவம் இரத்தினபுரி மார்க்கத்தில் தான் நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.