சிலியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் நாட்டின் அன்றாட வாழ்க்கையும், விமானங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து அந்நாட்டு அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும், அதனை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.