-மன்னார் நிருபர்)-
மடு கல்வி வலையத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி அ .த . க பாடசாலையின் வருடாந்த திறனாய்வு போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடை பெற்றுள்ளது.
பாடசாலையில் மைதானத்தில் 1.30 மணியளவில் சிறப்பாக ஆரம்பித்த குறித்த வருடாந்த திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் இ.லோறன்ஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது .
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதி கல்வி பணிப்பாளர் எஸ். மதியழகன், சிறப்பு விருந்தினராக ஏ.கோமஸ் பெரேரா ( ஆசிரிய ஆலோசகர் ) இகௌரவ விருந்தினராக, அருட்தந்தை அவலின் அடிகளார் (பங்கு தந்தை அந்தோனியார் புரம்) கலந்து சிறப்பித்தனர்.
மேலும் குறித்த நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள், புலம்பெயர் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரின் பங்கேற்புடனும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.