சித்திரைப் புத்தாண்டு

சித்திரைப் புத்தாண்டு

தமிழர் பண்டிகைகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை புத்தாண்டு காணப்படுகின்றது.

💢இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறனர். இனிப்புகள், பட்டாசுகள், விளையாட்டுக்கள் என நண்பர்கள், அயவர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது.

💢தமிழ் மாதங்களில் சித்திரைக்கு தனி சிறப்பானது காணப்படுகின்றது. ஏனெனில் சித்திரை முதலாம் நாள் தமிழ்ர்களின் பஞ்சாங்கத்தின் படி புத்தாண்டாக உலகமெங்குமுள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

💢தமிழ் நாட்காட்டியானது பன்னிரண்டு இராசிகளை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகின்றது. எனவே இராசிகளில் முதல் இராசியான மேசத்தில் சூரியன் சஞ்சரிக்கின்ற முதல் நாளாக சித்திரை புத்தாண்டானது கொண்டாடப்பட்டு வருகின்றது.

சித்திரைப் புத்தாண்டின் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள்

🎈சித்திரை புத்தாண்டு பலவகையான சம்பிரதாயங்களை கொண்டதாகும். அந்த வகையில் புத்தாண்டு அன்று மருத்து நீர் வைத்து நீராடுதல் விசேட சடங்கு முறையாகும் மற்றும் புத்தாடை அணிதல் , கோயிலுக்குச் செல்லுதல் , அன்றைய தினத்தில் இனிப்புப் பண்டங்களைத் தயாரித்து உறவினரோடு இணைந்து உண்ணுதல் , சுபநேரத்தில் கைவிசேடம் வழங்குதல் என்பன புத்தாண்டின் சிறப்பம்சமாக உள்ளது.

🎈இத் தினத்தில் இளையவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெறுவது வழக்கமாகும். மற்றும் கிராமிய விளையாட்டுக்களும். புதிய முயற்சிகள் மற்றும் தொழில் ஆரம்பித்தல் போன்ற நிகழ்வுகளும் இத் தினத்தில் இடம்பெறும்.

சிறப்புக்கள்

🎈சித்திரை புத்தாண்டானது வாழ்வில் பல புதிய ஆரம்பங்களை தருகின்ற ஒரு மகிழ்ச்சியான பண்டிகையாக தமிழ்ரகளால் கொண்டாடப்படுகின்ற சிறப்புடையதாகும்

🎈இது தமிழர்களின் வானியல் மற்றும் சாஸ்த்திரங்களின் பெருமைகளை உலகுக்கு உணர்த்துவதாகவும் அமைகின்றது.

🎈சித்திரையன்று மதிய உணவு சிறப்பாக இருக்கும். நெல் விதைப்பில் சிறுபோகம் ஆரம்பமாகும். இது போன்ற பல சிறப்புக்களைக் கொண்டதாக சித்திரைப் புத்தாண்டு அமைகின்றது.

புத்தாண்டு என்பதில் பல தரப்பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியிலே நிலவி வந்தாலும் சித்திரை முதலாம் நாள் என்பது அனைவரின் மனதிலும் பதிந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.

இப் புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சந்தோசம் இ செல்வம் இ அன்பு போன்றவை அமைய வேண்டும் என்பது சித்திரைப் புத்தாண்டின் முக்கியத்துவமாகும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்