சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கேகாலை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை உத்தியோகஸ்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது, அதன் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 240 சிகரெட்டு பண்டல்களை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கேகாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.