-யாழ் நிருபர்-
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறவன்புலவு – அறுகுவெளி பகுதியில் வைத்து பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 284 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.