சாரதிக்கும், நடத்துனருக்கும் வேதனத்துடன் விடுமுறை
கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் குறித்த பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இருவரினதும் மன அழுத்தத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரையும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கை போக்குவரத்து சபையின் தலைமையகத்திற்கு அழைத்து, அதன் தலைவர் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்