சவுக்கம் காட்டில் தீபரவல்: மக்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அணைக்கப்பட்ட தீ

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணல்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை சவுக்கம் காடு விஷமிகளால் தீ வைக்கப்பட்டு அதனை அணைக்கும் பணியில் பிரதேச மக்கள், மற்றும் இராணுவம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மணல் காடு சவுக்கங்காட்டு பிரதேசமானது விஷமிகளால் தீ வைக்கப்பட்டு பின்னர் எரிந்த சவுக்காட்டில் இருந்து எரிந்த சவுக்கம் விறகுகள் வெட்டப்பட்டு அதனை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் பல வருடங்களாக இடம் பெற்று வருகிறது.

நாளாந்தம் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்று சவுக்கம் மரங்களை வெட்டிச் சென்று அதனை விற்பனை செய்வதனை அவதானிக்க முடிகிறது.

சவுக்கங்காடானது விடுதலைப் புலிகளால் மக்களின் பங்களிப்போடு வளர்க்கப்பட ஒரு காடாகும். இந்த காட்டினை வன திணைக்களம் மற்றும் வனஜீவராசி திணைக்களம் ஆகியன தமது காடாக அறிவிப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதனை சமூக காடாக மாற்ற வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்திருக்கின்ற நிலையில் இதுவரை அது உத்தியோகபூர்வமாக சமூக காடாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் தினம் தினம் சவுக்கு மரங்கள் அழிக்கப்பட்டு விறகுக்காக வெட்டி செல்வதை தடுக்கும் நடவடிக்கையில் உரிய தரப்புகள் ஈடுபடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சவுக்கம் காட்டில் தீபரவல்: மக்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அணைக்கப்பட்ட தீ

சவுக்கம் காட்டில் தீபரவல்: மக்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அணைக்கப்பட்ட தீ

சவுக்கம் காட்டில் தீபரவல்: மக்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அணைக்கப்பட்ட தீ

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்