சர்வதேச அரங்கில் பாராட்டப்பட்ட இலங்கையின் பாரம்பரிய உணவு

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, இலங்கையின் பாரம்பரிய உணவான ‘கிரிபாத்’ ஐ சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான மாஸ்டர் செஃப் அவுஸ்திரேலியா (MasterChef Australia) எனும் போட்டியில் கலந்து கொண்டு சாவிந்திரி பெரேரா கிரிபதை செய்து நடுவர்களை மிரள வைத்துள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய காலை உணவின் விளக்கக்காட்சி மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டதுடன் நடுவர்களில் ஒருவரால் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என்று கூறப்பட்டுள்ளது.

‘சவ்’ என்று அன்புடன் அழைக்கப்படும் சாவிந்திரி பெரேரா, கிரிபாத் (பால் சாதம்) மற்றும் இலங்கை ட்ரேக்கிள் பூசப்பட்ட கருப்பட்டி தேங்காய்த் துருவலை வழங்கினார்.

அவரது உணவை ‘ஒரு கொண்டாட்டம்’ என்று ஒப்பிட்டு, நடுவர்கள் ‘உண்மையில் நல்ல இலங்கை உணவு’ வழங்கியதற்காக அவரை பாராட்டியுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்