உடலை வெள்ளையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் விட்டமின் அடங்கிய டின்னில் அடைக்கப்பட்ட பால் மாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்த பெண்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சட்டவிரோதமான முறையில் 179 டின்னில் அடைக்கப்பட்ட பால் மா இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டின்னில் அடைக்கப்பட்ட பால் மா 18 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது.