உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த சனல் 4 இன் தகவல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேவையேற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் நடாத்தப்படும்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சனல் 04 ஊடகம் “ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் பொம்பிங்ஸ் டிஸ்பேட்ச்சஸ்” என்ற பெயரில் பிரித்தானிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 11.05 அளவிலும் இலங்கை நேரப்படி நாளை புதன்கிழமை அதிகாலை 3.30 அளவிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல முக்கிய தகவல்களை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
