-பதுளை நிருபர்-
ஹாலிஎல பொலிஸாரினால் பெருந் தொகையான மதன மோதக (குலி) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மதன மோதக (குலி) சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி விற்பனை செய்யப்படுவதாக ஹாலிஎல பொலிஸாருக்கும் ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களத்திற்கும் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய ஹாலிஎல பொலிஸாரும் ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து ஹாலிஎல நகரில் சந்தேகத்திற்கு இடமான வர்த்தக நிலையத்தில் மேற்கொண்ட சூற்றிவளைப்பின் போது பெருந்தொகையான மதனமோதன (குலி) கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து 24 கிலோ 70 கிராம் மதனமோதன குலி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
