கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பினை, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைa தருமபுர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளப்பின் மூலம் 125 லீற்றர் சட்டவிரோத கசிப்பினை பொலிஸார் பறிமுதல் செய்யதுள்ளர்.
அத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தடயப் பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
