கேகாலை – ரம்புக்கனை கன்சலகமுவ பகுதியில் சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட கார் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கேகாலை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கார் மேலதிக விசாரணைகளுக்காக ரம்புக்கனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.