திருகோணமலை – கோமரங்கடவல பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் ரங்க தர்மதாச, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழக்கும் போது அவரது வயது 34 என்றும், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவரது உடலம் பரிசோதனைகளுக்காக கோமரங்கடவல மருத்துவமனையிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.