நாடாளுமன்றம் இன்று சனிக்கிழமை கூடியது.
இதன்போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அத்துடன் வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி கோரப்படும் எனவும், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டால் 20ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுச் செயலாளர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 19 ஆம்திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.