-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 55 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து 20 லீட்டர் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.