கொழும்பில், மரம் விழுதல், வீதி அடைப்புகள் மற்றும் வேறு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், உடனடியாக 110 என்ற துரித இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் ஏதேனும் ஆபத்தான மரங்கள் இருந்தால், 078 551 8712 என்ற இலக்கத்தின் ஊடாக அழைப்பை ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் தீயணைப்பு படை தற்போது தயார் நிலையில் உள்ளதுடன், தற்போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.