கொழும்பு, மட்டக்குளி காக்கைத்தீவு கடலில் நீராடச்சென்ற மூவரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்குளி காக்கைத்தீவு கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச்சென்ற மூவரில் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவரை தேடும் பணியில் கடற்படையினரும் மீனவர்களும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.