பிரதேச செயலக காரியாலய நிர்வாக அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், அவரின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை – லங்காபுர பிரதேச செயலக காரியாலய நிர்வாக அதிகாரி நேற்று திங்கட்கிழமை ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரது கணவரும், இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்ததாகவும், அவர்களது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட நிர்வாக அதிகாரியின் கணவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி https://www.minnal24.com/?p=79894