கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மில்லகஹமுல்ல, பன்விலதென்ன பகுதியில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்டவர் மில்லகஹமுல்ல, பன்விலதென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதடன் ,நீதவான் விசாரணைகளுக்குப் பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்ய கம்பளை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.