மட்டக்களப்பு மன்முனை தென்மேற்கு கொக்கட்டிச்சோலை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று புதன்கிழமை நிறைவேறியது.
கொக்கட்டிச்சோலை பிரதேச சபையின் தவிசாளர் இளையதம்பி திரேசகுமாரன் தலைமையில் மாதாந்த கூட்டம் சபா மண்டபத்தில் நடைபெற்ற போதே ஒன்பது வாக்குகளால் 2026 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை நிறைவேறியது.
சபை அமர்வின் போது இயற்கையான உயிர் நீத்த உறவுகளுக்கும் முன்னாள் அமைச்சர் அமரர் செல்லையா ராஜதுரை ஆகியோருக்கும் மௌன நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு பதினாறு உறுப்பினரைக் கொண்ட சபையில் ஒன்பது உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்
சுயாதீன குழுவை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழரசு கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆறு உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததுடன் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.