அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கைதி ஒருவருடன் சிறைக் காவல் அதிகாரி ஒருவரும் காணாமல்போயுள்ளார்.
கெசி வைட் என்ற கைதியும் விக்கி வைட் என்ற சிறைக் காவலரும் அலபாமாவில் உள்ள லோடர்டாலே கௌன்டி ஷெரிப் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலையிலேயே கடைசியாக காணப்பட்டுள்ளனர்.
உளவியல் மதிப்பீடு ஒன்றுக்கு அந்தக் கதியை அழைத்துச் செல்வதாக கூறியே காவல் அதிகாரி அவரைக் கூட்டிச் சென்றுள்ளார்.
ஆனால் , அது திட்ட அட்டவணையில் இருக்கவில்லை என்பதை அதிகாரிகள் பின்னரே கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் வைட் கைதியை தப்பவைக்க உதவினாரா அல்லது அவர் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளாரா என்பது பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கெசி வைட்டை பிடிப்பதற்கும் விக்கி வைட் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்கும் தகவல் அளிப்பவர்களுக்கு 10,000 டொலர் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.