கேரளாவில் மண்சரிவு அனர்த்தம்: 143 பேர் சடலங்களாக மீட்பு
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 186 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, அட்டமலை, சூரல்மலை, குன்ஹோம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று அதிகாலை பெரும்பாலான மக்கள் உறக்கத்திலிருந்தபோது இந்த மண்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, அட்டமலை, சூரல்மலை, குன்ஹோம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று அதிகாலை பெரும்பாலான மக்கள் உறக்கத்திலிருந்தபோது இந்த மண்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்