குவாத்தமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
குவாத்மாலாவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்தில் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக நகரத் தீயணைப்புத் துறையினர் குறிப்பிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.