குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து தாயின் சடலமும் மீட்பு

களுத்துறை வடக்கு கடற்கரையில், நேற்று வியாழக்கிழமை மாலை இரண்டரை வயது குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது தாயின் சடலமும், குறித்த  கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், இன்று வெள்ளிக்கிழமை காலை, குறித்த கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, கற்பாறைகளுக்குள் சிக்கி இருந்த நிலையில், குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட குறித்த தாயும், மகளும், களுத்துறை – தொடங்கொட – ஹல்கந்தவல பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலங்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்