-பதுளை நிருபர்-
பதுளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐஸ்லண்ட் பிரஜைகள் இருவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
23 வயதுடைய ஐஸ்லண்ட் நாட்டை சேர்ந்த இருவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
9 வளைவு புகையிரத பாலத்திற்கு அருகாமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இவர்கள் சென்று கொண்டிருந்த வேளை அவ்விடத்தில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்து இவர்களை தாக்கியுள்ளன.
மேலும் அயலவர்களின் உதவியுடன் தெமோதரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.