-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள குரங்குபாஞ்சான் குள புனரமைப்பு தொடர்பான பணிகளை முன்னெடுப்பது பற்றி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேற்று புதன்கிழமை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீரினை வழங்கி வரும் 2735 ஏக்கர் (கன) அடி நீரினைக் கொள்ளளவாக கொண்டுள்ள குரங்கு பாஞ்சான் குளம் சேதமடைந்துள்ளமை சம்பந்நமாகவும், அதனை விரைவாக புனரமைப்பு செய்வது சம்பந்தமாகவும் மற்றும் எதிர்வரும் மாரி காலத்தில் குரங்கு பாய்ந்தான் குளத்தைச் சூழவுள்ள வயல் நிலங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் சம்பந்தமாகவும், கிண்ணியா பிரதேச செயலாளர், குறிஞ்சாக்கேணி கமநல சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஜெ. சாஜித் மற்றும் கிண்ணியா கமநல சேவைகள் உத்தியோகத்தர் அஜித் கான் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்நமாகவும் பேசப்பட்டது
இச்சந்திப்பில் குரங்கு பாஞ்சான் விவசாய சம்மேளன தலைவர் சபருள்ளாஹ் மற்றும் பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.