-மூதூர் நிருபர்-
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தில் தற்காலிக குடிசை வீடொன்று நேற்று புதன் கிழமை மாலை தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.
விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது வீட்டு கூரையில் தீப்பிடித்தமையால் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டு உடமைகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதுடன் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.