வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை அவர்கள் பதவி நீக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வடமாகாண ஆளுநரான ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநரான அனுராதா யஹாம்பத், வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் எதிர்வரும் 17ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.