-கிண்ணியா நிருபர்-
ஒரு மில்லியன் மூலிகைச் செடிகளை நடும்,மற்றும் ஒரு இலட்சம் கிலோ மூலிகைகளை சேகரிக்கும் திட்டத்தின் கிழக்கு மாகாண ஆரம்ப நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை
மட்டக்களப்பு – வாழைச்சேனை காகித தொழிற்சாலை வளாகத்திலும், திருகோணமலை _ சம்பூர் விதுர கடற்படை முகாம் வளாகத்திலும் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, “ஒசுசவிய” திட்டத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி சமந்த கோரலே ஆரச்சி, மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ. நபீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



