கிளிநொச்சி மாவட்டத்தின் டித்வா பேரிடர் காரணமாக கடந்த நவம்பர் 28 ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக ஏ 35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் கடும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கெதியில் புனரமைப்பு பணிகளை மேற்கோண்டு இன்று நிறைவு செய்தனர்.
மேலும் குறித்த பாலத்தினை புலமைப்புக்காக இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து இன்று சனிக்கிழமை பாலத்தின் அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்துள்ளனர்.
இதன் போது இந்திய துணைத் தூதர் சாய் முரளி கலந்து கொண்டு குறித்த பாலத்தின் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டார். தற்பொழுது நிறைவு பெற்ற நிலையல் எதிர்வரும் 21 அல்லது 22 திகதிகளிள் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளது.


