கிளிநொச்சி மாவட்டத்தில் டித்வா பேரிடரினால் கடந்த நவம்பர் 28 ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பிரதான பாலம் பெரும் பாதிப்புக்குள்ளானது.
கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலமே பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் கிளிநொச்சி முல்லைதீவு மாவட்டங்களுக்கான போக்குவரத்து பெரும் பாதிப்புக்கள்ளானது.
மேலும், கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான போக்குவரத்து வட்டக்கச்சி ஊடாகவே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 11 மையில் பகுதியில் சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கெதியில் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பாலத்தின் புணரமைப்பு பணிகள்தற்பொழுது நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் இப்பாலமானது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

