-யாழ் நிருபர்-
கிளிநொச்சி முள்ளியவளை பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளியவளை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது இடம்பெற்ற நிலையில் சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.