கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைச்சேனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீரற்ற கால நிலை காரணமாக குறித்த முனைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அண்மையில் உள்ள கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் பாதை உடைந்து சேதமாக்கப்பட்டு வெள்ள நீரால் பாரிய படுகுழி ஏற்பட்டிருந்தது இதனை பாதுகாப்பற்ற எச்சரிக்கை விடுத்த நிலையில் இருளில் மூழ்கியவாறு மூடப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாதுகாப்பு கருதி ஒரு பகுதி மூடப்பட்டிருந்தது. குறித்த இடத்தில் மோதிய முச்சக்கர வண்டியே விபத்துக்கு உள்ளானது. இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

