-மூதூர் நிருபர்-
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கங்கை பாலத்தருகில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 காயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பஸ் பாதையைவிட்டு விலகி மரமொன்றுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் .
