-கிண்ணியா நிருபர்-
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வேன் ஒன்று ஹபரண பகுதியில் இன்று காலை சனிக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் டீவன் சாரதி உட்பட சிறுவர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
காயமடைந்துள்ளவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை ஹபரனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

