-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குளம் பகுதிக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் வீடு உட்பட பயன் தரும் மரங்கள் மற்றும் பயிர்களுக்கு சேதம் விளைவித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட, கிண்ணிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெல்லாங்குளம், மஜீத் நகர் முதலான பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதுடன் இவை ஊருக்குள் நுழைந்து ஒரு ஏக்கர் வயல் நிலம், தென்னை, வாழை, கத்தரி முதலான பயிர்கள் மற்றும் வீடு என்பவற்றை சேதப்படுத்தியுள்ளது.
மனிதன் யானை மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் அவற்றையும் மீறி சில அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் மிகவும் கடினமாக இருக்கிறது. சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் பெரும் துன்பத்துக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்