-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம்-மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து, இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்தே இவ்வாறு சடலம் காணப்படுகிறது.
அத்துடன், குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.