களுத்துறை ஊழல் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியின் இல்லத்திலிருந்து, 17 வகையான வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் மற்றும் சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறை தெரிவித்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட பொருட்களில் 373,000 ரூபாய் பணம், 270,000 ரூபாய் பெறுமதியான மூன்று கைக்கடிகாரங்கள், ஒரு கரட்டிற்கும் குறைவான சிறிய அளவிலான 150 மாணிக்கக் கற்கள் , இரண்டு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள், சிறந்த ரக வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் மற்றும் இரண்டு உள்நாட்டு மதுபானப் போத்தல்கள் என்பன உள்ளடங்குவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
முறைப்பாட்டாளரான உதவி காவல்துறைப் பரிசோதகர் தற்போது வல்வெட்டித்துறை காவல்துறையில் பணியாற்றி வருவதாக காவல்துறை தெரிவிக்கிறது.