-மூதூர் நிருபர்-
தோப்பூர் கமநல சேவை நிலையப் பிரிவிலுள்ள விவசாய சங்கங்களுக்கு முதற்கட்டமாக 5 காற்றழுத்த துப்பாக்கிகள், தோப்பூர் கமநல சேவை நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை, வழங்கி வைக்கப்பட்டன.

விவசாய நிலங்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக , தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சங்கங்களுக்கு இவ் காற்றழுத்த துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தோப்பூர் கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐ.பரிஸ், கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
