பொலன்னறுவை பகுதியில் நேற்று வியாழக்கிழமை காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகம பகுதியை சேர்ந்த 72 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
யானை தாக்கியதில் காயமடைந்த இருவரில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவரும் சகோதரர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.