காட்டு யானையின் அட்டகாசம்

-மூதூர் நிருபர்-

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நீணாக்கேணி கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானையொன்று வீட்டில் நடாத்தப்பட்ட பலசரக்குக்கடையை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.அத்தோடு வீட்டு வீட்டுப் பாதுகாப்பு வேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது.

மாலையாகினால் தமது கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லைகள் காணப்படுவதால் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கிராம மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

காட்டு யானையால் பாதிக்கப்பட்டு தமக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும், யானை பாதுகாப்பு வேலி அமைத்து தர முன் வர வேண்டும் எனவும் மூதூர் -நீணாக்கேணி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.