அநுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காட்டு யானைகள் இரவு வேளைகளில் வீடுகளின் கதவுகளை தட்டுவதாகவும், சில நேரங்களில் வீடுகளின் கதவுகளை உடைத்து சேதப்படுத்துவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பிரதேசவாசிகள் மிகவும் அச்சத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களின் நாளாந்த செயற்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
இந்த காட்டு யானைகள் தோட்டங்களில் உள்ள பயிர்களையும் செதப்படுத்துவதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.