களுவாஞ்சிகுடி வடக்கு.01 கிராமத்தின் ஆர் டி எஸ் முன்பள்ளி பாடசாலையின் ”2024 புதிய மாணவர்களின் வரவேற்பும் தரம் 01 செல்லும் மாணவர்களை கௌரவிக்கும்’ நிகழ்வும் சி. மூ. இராசமணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை பாடசாலையின் ஆசிரியர்களான திருமதி. ஜெயமலர் இராஜநாதன், திருமதி. யசீதா திஷாந் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது பிள்ளைகளின் கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும், கெளரவிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.







