மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் எண்டோஸ்கோப்பி அலகு இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் பொதுவைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன், ஏனைய வைத்தியர்கள், தாதிய பரிபாலகர்கள், தாதிஉத்தியோகஸ்த்தர்கள், வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுகாதார அமைச்சின் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எண்டோஸ்கோப்பி இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பட்டிருப்புத் தொகுதியிலுள்ள நோயாளர்கள் இதுவரைகாலமும் எண்டோஸ்கோப்பி தொடர்பான பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.