கல்முனை சாஹிரா கல்லூரியில் 03 நாட்கள் கொண்ட சாரணர் பயிற்சி முகாம் கல்லூரியில் நடைபெற்றது. செப்டம்பர் 28ம் திகதி வியாழக்கிழமை பி ப 04.30 மணிக்கு ஆரம்பமான சாரணர் பயிற்சி முகாமினை கல்லூரி அதிபர் எம். ஐ. ஜாபிர் ஆரம்பித்து வைத்தார்.
சாரண பொறுப்பாசிரியர் மேஜர் கே. எம். தமீம் ஒழுங்கமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட இம் முகாமில் சாரண பயிற்றுப்பாளர்களான உதவி மாவட்ட ஆணையாளர் எஸ். தஸ்தகீர் (ALT), தேசிய பயிற்றுவிப்பாளர் எம். ஏ. சலாம் (ATL), சாரணர் பயிற்சி குழு உறுப்பினர்களான எம். ஹஸ்மின் புஹாரி (WB), எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் (ASM), டப்லியூ. ஷவ்தப் உசைம் (PS) , எம்.எம்.எம். நூஹ் (PS), ஐ.எம். இஃஜாஸ் (PS), எம். எஸ். எம். அஸ்மான் (PS), எம். எப். எம். பஹாட் (PS), ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த பயிற்சி பாசறையில் சாரணர்களுக்கான போக்குவரத்து சமிக்ஞைகள், திசைகாட்டி வரைபடம்இ துணிகர செயற்பாடுகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் சம்பந்தமான விரிவுரை, தீப்பாசறை, போதைப் பொருளை ஒழிப்போம் சம்பந்தமான நடை பவனி, பாத்திரமின்றி சமைக்கும் முறைமை, சாரணர்கள் தங்கியிருக்கும் கூடார பரிசோதனை, குறியீடுகள், நில அளவைகள் சம்பந்தமான விரிவுரைகளும் பயிற்சிகளும், கட்டு முறைகள் போன்ற பல செயற்பாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் நடைபெற்றது.
இறுதிநிகழ்வாக 03 நாள் பாசறையினை வெற்றிகரமாக முடித்த சாரணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
