கல்முனை பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் காலை உணவிற்காக கொள்வனவு செய்யப்பட்ட நூட்லிஸ் உணவு பொதியில் எலி மலம் இருந்துள்ளது.
இதனையடுத்து குறித்த உணவை கொள்வனவு செய்த நுகர்வோர் சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை உணவகங்களில் உணவுகளை கொள்வனவு செய்யும் அனைவரும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.