கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வு டிசம்பர் புதன் முற்பகல் 11.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்து மலரை வெளியிட்டு வைப்பார். மலராசிரியர் விரிவுரையாளர் வே. சேந்தன் மலர் பற்றிய அறிமுகவுரையை ஆற்றுவார்.
கலாசாலையின் 102 வருட வரலாற்றில் வெளிவரும் 49 ஆவது மலர் இது எனத் தெரிவிக்கப்பட்டது.