13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் இந்தியாவின் வகிபாகம் பற்றிய கலந்துரையாடலுக்கு செல்வேன் எனக் கூறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கடந்த சனிக்கிழமை குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் இந்தியாவின் வகிபாகம் பற்றிய கலந்துரையாடலுக்கு செல்வேன் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழரசுக் கட்சிக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
ஆனால் குறித்த நிகழ்வில் அவர் கலந்து கொள்ளாத நிலையில், கட்சியில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக கலந்துரையாடலுக்கு செல்லாமல் விட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.